கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்குதனியாக 108 ஆம்புலன்ஸ் வசதி தருமபுரி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் மலர்விழி பேட்டி.
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் மலர்விழி கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் கொரோனா வைரஸ் கண்காணிப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் சளி காய்ச்சல் இருமல் உள்ளதா என்பதை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சளி காய்ச்சல் இருப்பவர்கள் ஒகேனக்கல் பகுதிக்கு வர வேண்டாம். பரிசல் ஓட்டிகள் மற்றும் உணவு சமைத்து அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் பகுதிக்கு பல மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பரிசல் ஓட்டிகள். உணவு சமைப்பார்கள் . மசாஜ் தொழிலாளர்கள் வீட்டுக்கு செல்லும் போது கைகால் களை கழுவி குளித்துவிட்டு செல்வதால் நோய்தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ள முடியும்.பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் கைகளை நன்றாக கழுவ வேண்டும் 30 வினாடிகள் தங்கள் கைகளை சுத்தமாக கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக 108 ஆம்புலன்ஸ் வசதி தருமபுரி மாவட்டத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குருணை வைரஸ் பரவுவதை தடுக்க மற்றும் குணப்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கொரோனாவைரஸ் கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவதால் பரவுவதில்லை இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுவதில்லை வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்